தமிழ் ஜோதிடம்: ஜாதகம் ஏன் பார்க்க வேண்டும்?

தமிழ் ஜோதிடம் வேதங்கள் பிறந்த காலங்களில் தேவ ரிஷிகள், சித்தர்கள் மற்றும் ஞானிகளால் டெலஸ்கோப், சாட்டிலைட் மற்றும் விண்வெளி ஆராய்சி கருவிகள் இல்லாத காலத்தில் தங்களது ஞான திருஷ்டியாலும் படைத்தவனின் பரிபூரண அருளாலும் முக்காலம் உணர்ந்து உரைக்கப்பட்டது.

தமிழ் ஜோதிடம் மிக தொண்மையான் ஜோதிட முறையாகும். தமிழ் ஜோதிடம் குறித்து பல இணையதளங்கள் வந்திருந்தாலும் எங்களையும் எழுத தூண்டியதால் இது வடிவமைக்க பட்டுள்ளது.

கடந்த சில நூறு ஆண்டு காலமாய் விண்வெளி ஆராய்ச்சிகள் தொடங்கிய பின்பு ஜோதிடத்தை சில பெரியவர்கள் ஜாதகம் சாதகமாக இல்லை என்று முடிவெடுத்து கிரகங்களின் சுழற்சி காலங்களை திருத்தி அமைத்து கிரக மாற்றங்களை வடிவமைத்து கொண்டனர்.. அதாவது திருத்தி அமைத்தவர்கள் தங்களை கடவுளுக்கு இணையாக பிரகடனபடுத்திக்கொண்டார்கள் . ஏதோ நல்லது நடந்தால் சரி என்று ஜாதகம் பார்பவர்கள் நல்ல ஜோதிடரை இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சிலர் ஜோதிடர் கூறும் சில பல வார்தைகளால் நாமே ஜோதிடம் பார்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து படிக்க ஆரம்பித்து முழுமையாக படிக்காமல் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சில பல குறிகளை சொல்லி அவர்களையும் இம்சை செய்து இன்பம் காண்கின்றனர்.

சில ஜோதிடர்களிடம் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி வரிசையில் காத்திருந்து பல ஆயிரங்களையும் செலவு செய்து நமது மொத்த வாழ்வும் இன்று இந்த ஜோதிடர் சொல்வதில்தான் இருக்கிறது என்று தம்மையும் தம்மை படைத்த சக்தியையும் நம்பாமல் ஜோதிட அடிமைகளாக இருப்பதை பார்க்க முடிகிறது .

ஜோதிடம் என்பது ஒரு கணிதமே .. உங்கள் முக்காலங்களையும் நீங்கள் அறிந்து கொண்டால் உங்களை படைத்த சக்திக்கு வேலை இல்லை என்றாகிவிடும். ஆக ஜோதிடம் என்பது உங்கள் வாழ்வின் திசை காட்டும் கருவி என்று மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர அதுவே வாழ்க்கை என்று முடிவு செய்து கொள்ள கூடாது.

ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்?

நீங்கள் மெய்ஞானத்தை (இறைவனை) நம்பினாலும் நம்பாவிட்டாலும் கிரகங்களின் இயற்கை ஆற்றலையும் கதிர்வீச்சுக்களையும் நம்பிதான் நம் பிறப்பு, வாழ்வு மற்றும் இறப்பு அமைந்து உள்ளது. இது  ஓர் அறிவியல் ரீதியான உண்மை என்பதை யாரும் மறுக்க இயலாது.

நமக்கு நடக்கும் நல்லது மற்றும் கெட்டது போன்றவை ஏதோ ஒரு சக்தியால் மட்டுமே நிகழ்கிறது. மனிதன் குழந்தையாய் இந்த பூமியில் (ஒரு கிரகமே) பிறக்கும்பொழுது உச்சந்தலையில் ஒரு சிறு பள்ளம் போன்ற அமைப்பை காணலாம் வயது கூட கூட (சுமார் 5 வயதில் )அந்த பள்ளம் மேடாகி விடும். அதன் பிறகே ஒரு மனிதனின் சுய உருவம் உருவாகிறது. காமம் குரோதம் வஞ்சகம் மாயை  போன்றவை அவனில் உருவாகிறது.  அந்த குழி மூடும் வரை குழந்தைகள் இறைவனுக்கு சமமானவர்கள் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள் .

அந்த சிறு குழிக்கு மையத்தில் மூளைக்குள் பீனியல் சுரப்பி [pineal gland] உள்ளது .

ஒரு முந்திரி பருப்பு போன்ற அமைப்புடைய அந்த சுரப்பி மனிதனின் மொத்த  செயல், எண்ணம்  மற்றும் வாழ்வு நிகழ்வுக்கும் காரணமாய் உள்ளது. அந்த சுரப்பிக்கும் கிரகங்களின் கதிரியக்கதிர்க்கும் தொடர்பு உள்ளது. ஆக ஒரு கிரக மாற்றம் ஏற்படும்போது அந்த சுரப்பியிலும் மாற்றம் ஏற்படுகிறது. அதுவே மனிதனையும் மனித உடலையும் இயக்குகிறது.

ஆக கிரக நகர்வுகளால் பலன்சொல்லப்படும் ஜோதிடத்தை நம்புவதில் தவறு இருப்பதாகவோ அல்லது மூட நம்பிக்கையாகவோ எடுத்துக்கொள்ள இயலாது.

ஒரு ஜோதிடரின் கணிப்பு தவறாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் ஜோதிடம் என்றும் தவறாக இருந்தது இல்லை ..

நமது வாழ்வில் ஒரு நிகழ்வு நல்லதாக அமைய வேண்டும் என்பதற்க்கு நாம் இறைவழிபாடு மற்றும் தான பரிகாரங்களை மேற்கொள்வதால் நமது மனம் எண்ணம் செயல் போன்றவை அந்த குறிப்பிட்ட நிகழ்வை குறித்து ஆழ்மனதில் பதியவைத்து வெற்றியடையலாமே தவிர ஒரு கிரக ரீதியான கெட்ட நிகழ்வுகளையோ அல்லது கஷ்டங்களையோ மாற்றி நல்லவையாக செய்து தப்பித்து கொள்ளலாம் என்று எண்ணுவது மட்டுமே இங்கு மூட நம்பிக்கையாகும்.  நமக்கு நல்ல நேரம் என்று தெரிந்து கொண்டால் ஒரு செயலை எவ்வளவு சிறப்பாக செய்யமுடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்து கொள்ளலாம். நமக்கு கெட்ட நேரம் என்று தெரிந்து கொண்டால் நாம் செயல்களில் பாதகமோ அல்லது இழப்போ ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கையாக சில முயற்சிகளை செய்து பாதிப்பை குறைக்கலாம் … ஆனால் கெட்ட நேரத்தின் விளைவுகளில் இருந்து எந்த உயிரினமும் தப்பிக்க இயலாது என்பதே உண்மை.

துல்லியமான ஜோதிட பலன்களுக்கு ஒருவரின் துல்லியமான பிறந்த நேரம் , பிறந்த தேதி , மற்றும் ஒருவர் பிறந்த ஊரின் துல்லியமான அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை கணிதங்கள் மிகவும் அவசியம். ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் சில நிமிடங்களில் பலன் சொல்லுவது என்பது ஒரு மேலோட்டமே அன்றி அத்தகைய ஜாதக பலன்கள் சரியாக இருக்கும் என்று உறுதி செய்ய இயலாது.

ஒரு ஜாதகத்தை முழுமையாக கணித்து பலன் சொல்ல குறைந்தது ஒருவார காலமாவது ஆகும் . அவ்வாறு இல்லையென்றால் அவை மிக துல்லியமான பலனாக இருக்க இயலாது. இதுவே கம்ப்யூட்டர் வந்த பின்பு கம்ப்யூட்டர் ஜாதகங்கள் எடுத்துக்கொண்டு பலன் சொல்ல மட்டும் ஒரு வாரம் ஆகும் ஆகும் . கைப்பட ஜாதகம் எழுதி பலன் சொல்ல வேண்டுமென்றால் குறைந்தது ஒரு மாத காலம் ஆகும் .

ஜாதகத்தை பார்த்த உடனே டக் என்று அந்த ஜோசியர் சொல்லிவிட்டார் – என்று சொல்லிக்கொள்வதெல்லாம் – காகம் உட்கார பனம்பழம் விழுந்தது போன்றதுதான்.

ஆனால் இன்று எதோ ஒரு மணி அல்லது ரெண்டு மணி நேரத்தில் அனைத்து பலன்களையும் ஜாதகம் மூலம் அறிந்து கொள்ள ஆவலாக இருப்பது பேதமையே.