தமிழ் ஜோதிட பலன்கள் – ஜாதக பலன்கள் பெற

தமிழ் ஜோதிடம், தொன்மையான கணிதம் மூலம் பிறந்த தேதி, நேரம் மற்றும் ஊர் விவரங்கள் மூலம் உங்கள் வாழ்க்கை பற்றி அறிய முடியும். அறிக்கையாக வாட்ஸப் மூலம் ஜாதக பலன்கள்.

Tamil Astrology - தமிழ் ஜோதிடம்

Tamil Astrology – தமிழ் ஜோதிடம்

தமிழ் ஜோதிட இணையதள நோக்கம் ஜாதக பலன்கள் சொல்வது மட்டும் அல்ல. இங்கு தொன்மையான தகவல்கள் ஆன்லைன் மூலம் சேமித்து வைக்கப்படும்.  

தமிழ் ஜோதிடம் என்பது ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு அறிவியல் கலையும், தொன்மையான நாகரிகத்தின் ஒரு பகுதியாகும். இது ஆழ்ந்த கணித கலை, பஞ்சாங்க கணிப்புகள், மற்றும் பிறந்த நேரத்தின் அடிப்படையில் மனித வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களை ஆராய்ந்து விளக்குகிறது.

பஞ்சாங்கத்தின் முக்கியத்துவம்
தமிழ் ஜோதிடத்தின் அடிப்படையான பஞ்சாங்கம், நாள், நேரம் மற்றும் கிரக அமைப்புகளின் ஒழுங்கினை விவரிக்கிறது. இது ஐந்து முக்கிய கூறுகளை உள்ளடக்கியது:

  • திதி (Tithi):  சந்திரனின் வளர்ச்சி மற்றும் தேய்வு நிலைகளை அடிப்படையாகக் கொண்டது.
  • வாரம் (Vaara): வாரத்தின் ஏழு தினங்களின் தன்மை மற்றும் கிரகங்களின் சக்தி.
  • நட்சத்திரம் (Nakshatra): உங்கள் பிறந்த நாளில் நிலவும் நட்சத்திரத்தின் தாக்கம்.
  • யோகம் (Yoga): சூரியன் மற்றும் சந்திரனின் இடையிலான கிரக சஞ்சார சக்தி நிலைமைகள்.
  • கரணம் (Karana): ஒரு நாளின் சிறு நேர பிரிவுகள், முக்கியமான செயல்களுக்கான வழிகாட்டி.

பிறந்த தேதி:  உங்கள் வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகளைக் குறிப்பதற்கு உதவுகிறது. உங்கள் தனித்துவம் மற்றும் குணாதிசயங்களை எடுத்துக்காட்டுகிறது.

பிறந்த நேரம்:  கிரகங்கள் எந்த ராசியில் அமைந்துள்ளன என்பதைத் துல்லியமாக கணித்து வாழ்க்கை பாதையை விளக்குகிறது. உங்கள் முன்னேற்றத்தில் முக்கிய கட்டங்களை சுட்டிக்காட்டுகிறது. இங்கு துல்லியமான நேரம் என்பது ஓரிரு நிமிடம் வித்யாசத்தில் இருந்தாலும் கணிக்க இயலும், அதிக நேர வித்யாசம் கொண்டு கணிக்க ஜாதக பலன்கள் முழுவதும் மாறுபடும்.

பிறந்த ஊர்:  உங்கள் வாழ்வில் இடப்பயனின் தாக்கத்தை விளக்குகிறது. பஞ்சபூத சக்திகளின் தாக்கம் உங்கள் வாழ்க்கைநிலைகளை எப்படி பாதிக்கிறது என்பதையும் கூறுகிறது. புவியியல் அமைப்பில் நீங்கள் எந்த அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை அமைந்த இருப்பிடத்தில் பிறந்தீர்கள் என்பதற்க்கு ஏற்ப கிரகங்களின் கதிரியக்கம் வேறுபாடான பலன்களை தரும். நீங்கள் எந்த இருப்பிடத்தில் வசித்தாலும், நீங்கள் எந்த ஊரில் பிறந்தீர்களோ அந்த பூகோள அமைப்பின்படியே ஜாதகம் கணிக்கப்படுகிறது .

தமிழ் ஜோதிடத்தில் பஞ்சாங்க விதிகளின் படி உங்கள் பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த ஊர் ஆகிய விவரங்கள் மூலம் துல்லியமான பலன்களை வழங்க முடியும்.

தமிழ் ஜோதிட பலன்கள் பல வகை:

  1. தினசரி பலன்: நாளின் நல்ல நேரங்கள் மற்றும் சவால்களை அறிந்து செயல்படவும், ஒரு பகல் ஒரு இரவு காலத்தில் எத்தனை மணிநேரங்களில் சாதகமும் எத்தனை மணி நேரம் சாதகமற்ற நிகழ்வும் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்பதை அறியலாம். இதில் ராகு காலம் எமகண்டம் நல்ல நேரம் படுபட்சி நேரம், ஊண் பட்சி நேரம், காரணம், கரிநாள், மேல்நோக்கு நாள் கீழ்நோக்கு நாள் என அறிந்து செயல்பட நன்மையை பெற்று தீமையை தவிர்க்கலாம்
  2. வாரபலன்: வாரத்தின் முக்கிய நேரங்களைப் பயன்படுத்த சிறந்த வாய்ப்புகளை அறிவதற்கான வழிகாட்டி.
  3. மாதபலன்: நவகிரகங்களின் மாறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்வின் சவால்கள் மற்றும் வெற்றிகளை கணிக்க உதவும்.
  4. வருட பலன்: உங்கள் வாழ்வின் அடுத்த கட்டங்களை நோக்கிச் செல்ல கிரகங்களின் முழுமையான ஒரு பிளான். ஜாதகத்தில் இதன் அமர்வுகளை கொண்டு தீர்மானிக்க இயலும்
  5. தசா புக்தி பலன்கள் : ஜாதகத்தில் தசாபுக்தி என்பது ஒவ்வொரு கிரகத்தின் கதிரியக்க தாக்கத்தையும் அதனால் நிகழும் நன்மை மற்றும் தீமையான பலன்கள் ஒவ்வொரு கிரகத்திற்க்கும் பல வருடங்கள் ஒதுக்கப்பட்டு அதன் கணித அடிப்படையில் நிகழ்கிறது . குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் முதல் இருபது ஆண்டுகள் வரை ஒரு கிரகத்தின் தசை காலமும் உட்பிரிவு காலமான புத்தி காலமும் பலன் செய்யும். அது நன்மையான பலன்களா தீமையான பலன்களா என்பது ஜாதகத்தில் ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தில் உதித்தது, எந்த நிலையில் அமர்ந்துள்ளது, அதன் தீர்மானிக்கப்பட்ட வேலைகள் என்ன என்பதை பொறுத்து சுப அசுப பலன்கள் ஒருவர் வாழ்வில் நடைபெறும்.

இன்றைய காலத்தில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், தமிழ் ஜோதிடம் மற்றும் ஜாதக பலன்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கின்றன. எங்கள் இணையதளம், பழமையான தமிழ் ஜோதிடத்தை நவீன கணினி கணிதம் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைத்து வழங்குகிறது.

தமிழ் ஜோதிடம் பொருளடக்கம்

கீழே உள்ள இணைப்புகள் உங்களை குறிப்பிட்ட பக்கங்களுக்கு எடுத்து செல்லும் . இந்த பொருளடக்கமானது முறைபடுத்தப்பட்டது அல்ல. 


  1.  வேத கால தமிழ் ஜோதிடம் – ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்?
  2. ஜோதிட கணக்கீடு – பஞ்சாங்கம்
  3. ராசி மண்டலங்கள் மற்றும் அதன் தன்மைகள்
  4. நட்சத்திரங்கள், நட்சத்திர பாதங்கள் மற்றும் அதன் ராசிகள்
  5. நட்சத்திரம் மற்றும் நட்சத்திர அதிபதிகள்
  6. ஜென்ம நட்சத்திரம் – ஜென்ம ராசி  – ஜென்ம லக்னம் – திதி – ருது – அயனம்
  7.  கிரகங்களின் இயற்கை தன்மைகள் – பலம் – இயக்கம்
  8. ஸ்தானம் – ராசி அமைவிடம் – ஸ்தான தன்மைகள்
  9. திதிகள் மற்றும் திதி சூனிய ராசிகள் [ விஷ சூனிய ராசி ]
  10. சுபர், பாபர், லக்ன சுபர், லக்ன பாவர், அதிபத்ய சுபர், ஆதிபத்ய பாவர், சமம் போன்ற கிரக தன்மைகள்
  11. கிரகங்களின் நட்பு பகை சமம்
  12. ஜெனன ஜாதகம்
  13. கோள்சாரம் [கோச்சாரம்]
  14.  சூரியன் கோசார பலன்கள்
  15. சந்திரன் கோசார பலன்கள்
  16. செவ்வாய் கோசார பலன்கள்
  17. புதன் கோசார பலன்கள்
  18. குரு கோசார பலன்கள்
  19. சுக்கிரன் கோசார பலன்கள்
  20. சனி கோசார பலன்கள்
  21. ராகு கோசார பலன்கள்
  22. கேது கோசார பலன்கள்
  23. யோகி அவயோகி பாதகாதிபதி மாரகாதிபதி 
  24. யோகி
  25. அவயோகி
  26. பாதகாதிபதி 
  27. மாரகாதிபதி