ஜாதக லக்னத்திற்க்கு மாரகாதிபதி யார்? என்ன செய்வார் ?

மாரகாதிபதி கிரகம் மாரகம் அல்லது அதற்க்கு ஒப்பான கஷ்டங்களை கண்டங்களை கொடுப்பவர். ஒவ்வொரு லக்னத்திற்க்கும் மாரகாதிபதி கிரகம் மாறுபடும் . மாராகம் என்றால் மரணம் என்று பொருள் .

பொதுவாக ஒருவருக்கு மரணம் ஏற்படும் அந்திம காலங்களில் இந்த மாரகாதிபதி கிரகம் தனது பங்கு காரியங்களை செய்யும்.  நடுத்தர வயதில் அல்லது இளம் வயதில் மாரகாதிபதி கிரகம் மாராகத்திற்க்கு ஒப்பான கண்டங்களை கொடுக்கும்.  ஒருசிலருக்கு ஆயுள் பாவம் குறைவாக இருப்பின் மாரகாதிபதி நிச்சயம் மரணத்தை கொடுக்கும்.

மேலும் மாரகாதிபதியாக வரும் கிரகம் பிற ஸ்தானங்களுக்கு அதிபதியாக வரும்போது அந்த ஸ்தான பலன் முழு சுபமாக நடைபெற வாய்ப்பில்லை . மேலும் அந்த ஸ்தானத்தால் மாராகத்திற்க்கு ஒப்பான கண்டங்களை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது.

மேற்படி மாரகாதிபதி 6, 8, 12 ஆமிடதில் மறைந்தாலோ அல்லது நீசம் பெற்றாலோ அல்லது ஒரு பகை கிரகத்தோடு அஸ்தங்கம் பெற்று இருந்தாலோ மாரகதன்மை இளம் வயதில் ஏற்பட வாய்ப்பில்லை. அதாவது நண்மை அல்லது தீமையோ செய்ய இயலாது..

மாரகாதிபதி எப்போது மாராகம் செய்வார் ?

ஒருவருக்கு மாரகாதிபதி தசை நடைபெறும்போது அல்லது ஆயுள் ஸ்தான அதிபதி தசையில். அல்லது மூன்றமிடம் தசையில்  மாரகாதிபதி புக்தி நடைபெறும்போது மாராகம் நடக்க வாய்ப்புகள் உண்டு.

லக்னம் மாரகஸ்தானம் மாரகாதிபதி ஸ்தானாதிபதி
மேஷம்2 ஆமிடம்
7 ஆமிடம்
சுக்கிரன்
2 + 7
ரிஷபம் 3 ஆமிடம்
8 ஆமிடம்
சந்திரன்
குரு
3
8 + 11
மிதுனம் 2 ஆமிடம்
7 ஆமிடம்
11 ஆமிடம்
சந்திரன்
குரு
செவ்வாய்
2
7 + 10
6 + 11
கடகம் 2 ஆமிடம்
7 ஆமிடம்
சூரியன்
சனி
2
7 + 8
சிம்மம் 3 ஆமிடம்
8 ஆமிடம்
சுக்கிரன்
குரு
3 + 10
5 + 8
கன்னி 2 ஆமிடம்
7 ஆமிடம்
11 ஆமிடம்
சுக்கிரன்
குரு
சந்திரன்
2 + 9
4 + 7
11
துலாம் 2 ஆமிடம்
7 ஆமிடம்
செவ்வாய்
செவ்வாய்
2 + 7
விருச்சிகம் 3 ஆமிடம்
8 ஆமிடம்
சனி
புதன்
3 + 4
8 + 11
தனுசு2 ஆமிடம்
7 ஆமிடம்
11 ஆமிடம்
சனி
புதன்
சுக்கிரன்
2 + 3
7 + 10
6 + 11
மகரம் 2 ஆமிடம்
7 ஆமிடம்
சனி
சந்திரன்
1 + 2
7
கும்பம் 3 ஆமிடம்
8 ஆமிடம்
செவ்வாய்
புதன்
3 + 10
5 + 8
மீனம் 2 ஆமிடம்
7 ஆமிடம்
11 ஆமிடம்
செவ்வாய்
புதன்
சனி
2 + 9
4 + 7
10 + 11