கோசார பலன்கள்

கீழே உள்ள கிரகங்களை கிளிக் செய்து கோசார பலன்களை தெரிந்து கொள்ளலாம்
சூரியன்சந்திரன் செவ்வாய்
புதன் குரு சுக்கிரன்
சனி ராகு கேது

புதன் கோசார பலன்கள்

புதன் ஒரு ராசியில் 1 மாத காலம் சஞ்சரிப்பார்.  ராசியின் நடுபகுதியில் சஞ்சாரம் செய்யும் பொழுது சுப அசுப பலன்களை நடத்திவைப்பார்.


கோசார புதன் ஜெனன ராசியில் இருந்து ஒவ்வொரு ராசியாக சஞ்சரிக்கும் பொது ஏற்படும் சுப அசுப பலன்கள் கீழே உள்ளது.

குறிப்பு : கோசார பொது பலன்கள் 40% தாக்கத்தை மட்டுமே ஒரு ஜாதகருக்கு உண்டுபண்ணும். ஜெனன ஜாதகம் மற்றும் நடப்பு தசா புக்திகள் 60% தாக்கத்தை உண்டு பண்ணும்

சுப பலன் – [ராசி] முதல் புதன்  4, 6, 8 , 10 , 11 வீடுகளில் பயணிக்கும் போது சுப பலன்

அசுப பலன் – [ராசி] முதல் புதன் 1, 2, 3, 5, 7, 9, 12 வீடுகளில் பயணிக்கும் போது அசுப பலன்

முதலாம் வீட்டில் (ராசி):

பொருள் விரையம், பகை, பயம், வீண் விவாதம், குடும்பத்தில் தங்க இயலாமை, ஒரு கட்டுபாட்டில் வாழ்வது, குடும்பத்தில் புது நபர்கள், தீயோர் நட்பால் மனநிம்மதி இல்லாமை, தொழில் தடை, கவலை, வாரிசுகளால் செலவு, உயர் நிலையில் உள்ளவர்களால் சிரமம் போன்றவை ஏற்படும்.

இரண்டாம் வீட்டில்:

பண தட்டுப்பாடு, மன கவலை, குடும்ப செலவு, தொழிலில் பிரச்சனை, கெட்ட பெயர், பயம், வாழ்க்கை துணையால் உதவி, உத்யோகத்தில் ஆதரவு, போன்றவை நடக்கும்.

மூன்றாம் வீட்டில்:

புது நட்பு, தீய செயல் விளைவால் பயம், உத்யோகத்தில் சிரமம், சுப காரியம், வாழ்க்கை துணை உறவில் மகிழ்ச்சி போன்றவை ஏற்படும்.

நான்காம் வீட்டில்:

பண வரவு, .மகிழ்ச்சிக்காக செலவு, செழிப்பு, உறவுகளின் ஆதரவு, தன லாபம், நட்புறவு போன்றவை ஏற்படும்

ஐந்தாம் வீட்டில்:

குடும்பத்தில் பகை, இயலாமை, வாரிசுகளால் தொல்லை, திடீர் சிரமத்தால் மன குழப்பம், இட பெயர்ச்சி, மாற்று பாலினதவரால் பண விரையம், தொழில் மற்றும் உத்தியோகத்தில் நஷ்டம் மற்றும் தடைகள், மாற்று பாலினதவரால் குடும்பதில் குழப்பம் போன்றவை ஏற்படும்.

ஆறாம் வீட்டில்:

செல்வாக்கு, வெற்றி, மாற்று பாலினதவரால் வரவு, தொழில் மற்றும் உத்த்யோகத்தில் ஆதாயம், நிலம் மனை வாங்குதல், மன மகிழ்ச்சி போன்றவை உருவாகும்.

ஏழாம் வீட்டில்:

சண்டை, துன்பம், நோய், பேராசை, இடையூறு, துணிவு, முன்கோபம், நட்பு பகையாவது, தீய எண்ணம், மாற்று பாலினதோரால் அவமானம், தொழில் சிரமம் போன்றவை ஏற்படும்.

எட்டாம் வீட்டில்:

தன லாபம், புத்திர லாபம், காரிய வெற்றி, புதிய துணிமணிகள், மகிழ்ச்சி, கல்வி முன்னேற்றம், பயணத்தால் லாபம், நட்ப்பால் ஆதாயம் உதவி,, தொழில் தடை நீங்குதல் போன்றவை நிகழும்.

ஒன்பதாம் வீட்டில்:

தடை, வீண் பழி, அலைச்சல், பகை, கவலை, பயம், தொழில் சிரமம், பொருள் இழப்பு, வாரிசு ஒத்துலையாமை, தந்தை உறவினரால் பிரச்சனை, வாழ்க்கை துணையால் நல்லுறவு போன்றவை உண்டாகும்.

பத்தாம் வீட்டில்:

பகை வெல்லுதல், தன லாபம், சுகம், பொழுதுப்போக்கு, புது ஆபரணம், தொழில் விருத்தி, காதல் வெற்றி போன்றவை ஏற்படும்.

பதினொன்றாம் வீட்டில்:

லாபம், சுகம், தன வரவு, தொழில் மேன்மை, பதவி உயர்வு, நட்பால் ஆதாயம், மூத்த உடன்பிறப்பால் உதவி, வாழ்க்கைத்துணை நல்லுறவு போன்றவை நிகழும்.

பனிரெண்டாம் வீட்டில்:

பகை, நோய், துன்பம், அவ பெயர், கடன் தொல்லை, குடும்ப உறுப்பினர் உடல்நிலை கோளாறு, வாழ்க்கைத்துணை நல்லுறவு போன்றவை ஏற்படும்.

புதன் ஆட்சி உச்ச வீடுகளில் சுப பலம் பெற்று தீய கிரக சேர்க்கை பார்வை இன்றி இருந்தால் அசுப பலன்கள் குறையும்.