உங்கள் ஜாதக லக்னத்திற்க்கு பாதகாதிபதி யார்? என்ன செய்வார் ?

பாதகாதிபதி ஒவ்வொரு வகை லக்னத்திற்க்கும் மாறுபடுவார். லக்னங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது . அவை சர லக்னம் ஸ்திர லக்னம் உபயலக்னம் என வகைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு லக்னத்திற்க்கும் பாதகாதிபதி கிரகம் மாறுபடும்.

பாதகதிபதி என்பவர் பாதகத்தை செய்பவர். அதாவது ஒரு காரியத்தை செய்யவிடாமல் தடுப்பது அல்லது செயல்படாமல் செய்வது என்று பொருள் கொள்ளலாம் . சுருக்கமாக கெடுதல் செய்யும் கிரகம் .

ஒரு சில லக்னத்திற்க்கு பாதகாதிபதி இருவகை மற்றும் மூவகை வேலைகளை செய்யும் கிரகமாக இருக்கும்.

உதாரணமாக  – கன்னி லக்னத்திற்க்கு குரு பாதகாதிபதி அவர் 4 ஆமிடம் மற்றும் 7 ஆமிட அதிபதியாவார். ஆக 4 மிடமான சுகஸ்தானம் மற்றும் 7 மிட காளஸ்திரஸ்தானம் ஆகியவற்றிக்கு அதிபதி.

ஆக குரு கிரகம் 3 வகை வேலைகளை அந்த ஜாதகருக்கு செய்வார்.  சில நூல்களின் கூற்றுப்படி பாதகதிபதி சில நேரம் சுகஸ்தான பலனையும் சிலநேரம் காளஸ்திரஸ்தான பலனையும் சில நேரம் பாதகாதிபதி பலனையும் திசை புக்திக்கு ஏற்றார் போல் மேற்படி கன்னி லக்னத்திற்க்கு  செய்வார் என்கின்றன .

எமது அனுபவதில் சுகஸ்தான காளஸ்திர ஸ்தான அதிபதி பாதகதிபதியயாக வருவது சுகத்தில் நிறைவின்மையும் காளஸ்திரத்தில் சிக்கல்களையும் உண்டுசெய்வதும் . அந்த அந்த ஸ்தான பாவ பலன்களை கெடுதல் செய்வதில் இருந்து தப்ப இயலாது என்பதாகும்.

அதே குரு 6, 8, 12 போன்ற மறைவு ஸ்தானத்தில் மறைந்தால் குருவின் பாதக தன்மை மறைந்து விடும் என்றாலும் அவர் எந்த ஸ்தானத்திர்க்கு அதிபதியோ அந்த ஸ்தானதின் சுப பலனை பாதகாதிபதி கிரகம் மறைவு பெறுவதால் முழுமை அடையாமலோ அல்லது சுபம் இன்றி கெடுதல் இல்லாமலோ இருக்கும். இதே அமைப்பு மேற்படி பாதகாதிபதி நீசம் பெற்றாலும் ஏற்படும் .

ஆக ஒருவகையில் பாதகாதிபதி ஜாதகருக்கு ஏதேனும் ஒருவகையில் தவறாது பாதகம் செய்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது.  கீழே உள்ள அட்டவனையில் எந்த லக்னத்திற்க்கு எந்த கிரகம் பாதகதிபதியாக வருகிறார் மற்றும் அவர் லக்னத்தின் எந்த எந்த ஸ்தானதிற்க்கும் அதிபதி என்பதை விளக்கமாக சொல்கிறது..

பாதகாதிபதி எப்போது பாதகம் செய்வார் ?

பாதகாதிபதி கிரகம் தனது தசை புக்தி அந்தரங்களிலும் அல்லது பிற தசைகள் நடக்கும்போது புத்தி நாதனாக அந்தர நாதனாக வரும்போது பாதகம் செய்வார்.

லக்னம் பாதகஸ்தானம் பாதகாதிபதி ஸ்தானாதிபதி
மேஷம்11 ஆமிடம் சனி 10 + 11
ரிஷபம் 9 ஆமிடம் சனி 9 + 10
மிதுனம் 7 ஆமிடம் குரு 7 + 10
கடகம் 11 ஆமிடம் சுக்கிரன் 4 + 11
சிம்மம் 9 ஆமிடம் செவ்வாய்4 + 9
கன்னி 7 ஆமிடம் குரு 4 + 7
துலாம் 11 ஆமிடம் சூரியன் 11
விருச்சிகம் 9 ஆமிடம் சந்திரன் 9
தனுசு7 ஆமிடம் புதன் 7 + 10
மகரம் 11 ஆமிடம் செவ்வாய்4 + 11
கும்பம் 9 ஆமிடம் சுக்கிரன் 4 + 9
மீனம் 7 ஆமிடம் புதன் 4 + 7