யோகி, அவயோகி, பாதகாதிபதி, மாராகாதிபதி

பல ஜாதக கணிப்புகள் தவறாக இருப்பதற்க்கு காரணம் யோகி, அவயோகி, பாதகாதிபதி, மாராகாதிபதி கணிதமே. பல ஜோதிடர்கள் இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள்.


யோகி – அவயோகி  :

ஒரு ஜாதகத்தில் யோகி என்பவர் ஒருவர் பிறக்கும் பொது பஞ்சாங்கத்தில் தினமும் திதி, நட்சத்திரம், யோகம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அதன்படி கணிக்கப்படுவது யோகி மற்றும் அவயோகி கிரகங்கள் . இவை சூரியன் மற்றும் சந்திரன் பாகைகளை வைத்து கணக்கிடப்படுகிறது. .

யோகி  –  ஒருவர் ஜாதகப்படி யோகியாக இருக்கும் கிரகம் என்பவர் சில பல கிரகங்கள் பலம் இழந்திருந்தாலும் அந்த யோகி கிரகம் மட்டும் பலம் பெற்று இருந்தால் அதாவது  கெட்டுப்போகாமல் இருந்தால் நிச்சயம் அந்த தசை ஜாதகரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் . அந்த யோகி கிரகம் கெட்டு போயி இருந்தால் நல்லதோ கெட்டதோ நடக்காது. யோகி பற்றி மேலும் அறிய

அவயோகி – ஒருவர் ஜாதகப்படி அவயோகி கிரகம் நல்ல பலதோடு இருந்தால் அந்த கிரகத்தின் தசையில் ஜாதகத்தில் பெரிதாக தீமைகள் செய்ய இயலாது. அவரே .ஜாதகத்தில் கெட்டு இருந்தால்  நிச்சயம் அந்த தசையில் கெடுதல் ஏற்படும். அவயோகி பற்றி மேலும் அறிய

பாதகதிபதி மாரகாதிபதி :

ஜாதகத்தில் பாதகஸ்தானம் மாராகஸ்தானம் என்று முக்கியமாக பார்க்கவேண்டிய இடங்கள் உள்ளது. ஒவ்வொரு வகை லக்னத்திற்க்கும் பாதகாதிபதி மாரகாதிபதி வேறு வேறு கிரகங்களாக இருக்கும் .

பாதகாதிபதி:   லக்னத்தில் இருந்து எந்த ஒரு ஸ்தானம் ஒரு ஜாதகத்தில்  பாதகஸ்தானமோ அந்த வீட்டு அதிபதி  பாதகதிபதியாக  சொல்லப்படுகிறது. பாதகதிபதி என்பவர் ஒரு ஜாதகருக்கு பாதகத்தை உண்டு பண்ணுவார். பாதகாதிபதி கிரகங்கள் தசா புக்திகளில் தீமை செய்வார் . பாதகாதிபதி பற்றி மேலும் அறிய

மாரகாதிபதி :  மாரகம் என்றால் மரணம் – மாரகாதிபதி மரணத்திற்க்கு ஒப்பான கண்டங்களை செய்பவர். ஒரு சில ஜாதகருக்கு ஆயுள் நெருங்கும் நேரம் மரணத்தை செய்யும். நமது முன் வினை பலன் படியே மாரகம் நடக்கும். ஒவ்வொரு லக்னத்திற்கும் மாரகாதிபதி மாறுபடும்.  மாரகாதிபதி பற்றி மேலும் அறிய