பஞ்சாங்கம்

தமிழ் ஜோதிடம் – பஞ்சாங்கம் ஜோதிட கணக்கீடுகளில் உபயோகிக்கப்படும் கால அளவு கணிதம் . அதாவது 5 வகை கணக்குகள் அடங்கிய கிரக சுழற்சி சம்பந்தமான கணிதம் .


திதி, வாரம், நட்சத்திரம், யோகம் மற்றும் காரணம் என்று 5 வகை கணக்குகளை உள்ளடக்கியது . சுப காரியங்களை செய்ய இவை ஐந்தும் நன்றாக இருக்க வேண்டும் .

ஒரு ஜாதகத்தில் உள்ள மொத்த ராசிகளின் பாகைகளின் கூட்டுத்தொகை  360 டிகிரிகள்.  அதாவது ஒரு ராசி கட்டம் 30 டிகிரிகளை கொண்டது.  ஒரு நட்சத்திரம்  13.20 டிகிரி . ஒரு நட்சத்திரம் 4 பிரிவுகள் கொண்டது . அதாவது பாதங்களை கொண்டது. முதலாம் p ஒரு நட்சத்திரத்தின் ஒரு பாதம்  3.20 டிகிரி . இது அடிப்படை கணிதம் .

திதி :

ஒரு பஞ்சாங்கம் திதிகளை 16 வகையாக பிரிக்கிறது . அதாவது .சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தொலைவு . ஒரு திதி 12 டிகிரியாக கணக்கிடப்படுகிறது

வாரம் :

7 நாட்கள் கொண்டது ஒரு வாரம் – ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்ற 7 நாட்கள் கொண்டது ஒரு வாரம்

நட்சத்திரம்:

27 நட்சத்திரங்கள் கொண்டது நமது ராசி மண்டலம். ஒரு நட்சத்திரம் 13.20 டிகிரியாக கணக்கிடப்படுகின்றது. அவையாவன : 1. அசுவினி, 2. பரணி, 3. கார்த்திகை, 4. ரோகினி, 5. மிருகசீரிடம், 6. திருவாதிரை, 7. புனர்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம், 10. மகம், 11. பூரம், 12. உத்திரம், 13. அஸ்தம், 14. சித்திரை, 15. சுவாதி, 16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை, 19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம், 22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம், 25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி.

யோகம்:

யோகம் 27 வகைப்படும் ஒவ்வொரு யோகமும் 13.20 டிகிரி கொண்டது . ஒரு நாளில் ஒரே யோகமும் ஒரே நட்சத்திரமும் வரும் என்று சொல்ல இயலாது . வேறே வேறு  நட்சத்திரங்களும் வேறு வேறு யோகங்களும் வரலாம்.  சூரியனின் பாகை மற்றும் சந்திரனின் பாகை சேர்க்கைக்கு பெயர் யோகம் என்று பஞ்சாங்கம் சொல்கிறது . 27 யோக வகைகள் 1. விஷ்கம்பம், 2. பிரீதி, 3. ஆயுஷ்மான், 4. சௌபாக்கியம், 5. சோபனம், 6. அதிகண்டம், 7. சுகர்மம், 8. திருதி, 9. சூலம், 10. கண்டம், 11. விருதி, 12. துருவம், 13. வியாகதம், 14. அரிசணம், 15. வச்சிரம், 16. சித்தி, 17. வியாதிபாதம், 18. வரியான், 19. பரிகம், 20. சிவம், 21. சித்தம், 22. சாத்தீயம், 23. சுபம், 24. சுப்பிரம், 25. பிராமியம், 26. ஐந்திரம், 27. வைதிருதி, என அழைக்கப்படுகிறது .

கரணம் :

ஒரு திதியில் பாதி கரணம் . கரணம் மொத்தம் பதினொன்று 1. பவம் 2.பாலவம் 3.கௌலவம் . 4. தைதுளை 5.கரசை 6.வணிசை 7. பத்திரை 8.சகுனி 9.சதுஸ் பாதம் 10.நாகவம் 11.கிம்ஸ்துக்னம். ஒரு கரணம் 6 டிகிரியாக கணக்கு எடுக்க படுகிறது.

பஞ்சாங்க கணிதம் என்பது மிக மிக கஷ்டமான தொழில்.  ஜோதிடத்தில் பஞ்சாங்கம் ஒரு தேதியில் ஒவ்வொரு கிரகங்களும் எந்த எந்த ராசியில் இருக்கிறது என்பதையும் சூரிய உதயத்தை வைத்து லக்னம் கணிக்கவும் சந்திரனை வைத்து ராசியை கணிக்கவும் உதவுகிறது.

பஞ்சாங்கம் இரு வகையாக உள்ளது . ஒன்று வாக்கிய பஞ்சாங்கம் மற்றொன்று திருக்கணித பஞ்சாங்கம் – இரண்டும் கிரக சுழற்சி நாட்களில் சிறிது வித்யாசம் கொண்டது. பழைய கால ஜாதகங்களும் தென் தமிழக மக்களும் வாக்கிய பஞ்சாங்கத்தை பின்பற்றுகின்றனர் . வட தமிழக ஜோதிடர்கள் திருகணிதத்தை பின்பற்றுகின்றனர்.  நமக்கு எந்த பஞ்சாங்க மூலமாக கணிக்கப்பட்ட ஜாதகம் நடைமுறை அனுபவத்திற்க்கு ஒத்து வருகிறதோ அதை பின்பற்றலாம்.