நட்சத்திரம்-நட்சத்திர பாதங்கள்-அதன் ராசிகள்

புவியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் 30 பாகைகள் கொண்டது. காலசக்கர விதியின்படி மேஷம் முதல் 30 பாகை என்று எண்ணிக்கொண்டு வார மீனம் முடியும்போது 360 பாகைகளில் முடியும் . ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை. ஒரு நட்சத்திரம் நான்கு நட்சத்திர  பாதங்கள் கொண்டவை. அவை முதலாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் என பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாதமும் 3 பாகை, 20 பாகைத்துளிகள். இதன் மூலம் இராசிச் சக்கரம் 27 X 4 = 108 பாதங்களாக வகுக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்திலுள்ள 12 இராசிகள் ஒவ்வொன்றும் 9 பாதங்களை அல்லது 2-1/4 நட்சத்திரங்களைக்கொண்ட 30 பாகைகளை ஒரு ராசி கொண்டுள்ளது.

தமிழ் மாதம் 

நட்சத்திரம்

நட்சத்திர பாதம் 

ராசி 

சித்திரை 

அஸ்வினி

1+2+3+4 பாதங்கள்

மேஷம்

சித்திரை 

பரணி

1+2+3+4 பாதங்கள்

மேஷம்

சித்திரை 

வைகாசி 

கார்த்திகை

1 ஆம் பாதம் 

2+3+4 பாதங்கள்

மேஷம்

ரிஷபம் 

வைகாசி 

ரோகிணி 

1+2+3+4 பாதங்கள்

ரிஷபம் 

வைகாசி 

ஆனி

மிருகசீரிஷம்

1+2 பாதங்கள்

3+4 பாதங்கள்

ரிஷபம் 

மிதுனம் 

ஆனி

திருவாதிரை 

1+2+3+4 பாதங்கள்

மிதுனம் 

ஆனி

ஆடி

புனர்பூசம்

1+2+3 பாதங்கள்

4 ஆம் பாதம்

மிதுனம்

கடகம் 

ஆடி

பூசம் 

1+2+3+4 பாதங்கள்

கடகம் 

ஆடி

ஆயில்யம் 

1+2+3+4 பாதங்கள்

கடகம்

ஆவணி

மகம் 

1+2+3+4 பாதங்கள்

சிம்மம்

ஆவணி

பூரம் 

1+2+3+4 பாதங்கள்

சிம்மம் 

ஆவணி

புரட்டாசி

உத்திரம் 

1ஆம் பாதம்

2+3+4 பாதங்கள்

சிம்மம்

கன்னி

புரட்டாசி

ஹஸ்தம் 

1+2+3+4 பாதங்கள்

கன்னி

புரட்டாசி

ஐப்பசி

சித்திரை 

1+2 பாதங்கள்

3+4 பாதங்கள்

கன்னி

துலாம் 

ஐப்பசி

சுவாதி

1+2+3+4 பாதங்கள்

துலாம் 

ஐப்பசி

கார்த்திகை

விசாகம் 

1+2+3 பாதங்கள்

4 ஆம் பாதம்

துலாம் 

விருச்சிகம் 

கார்த்திகை

அனுசம்

1+2+3+4 பாதங்கள்

விருச்சிகம் 

கார்த்திகை

கேட்டை 

1+2+3+4 பாதங்கள்

விருச்சிகம் 

மார்கழி

மூலம் 

1+2+3+4 பாதங்கள்

தனுசு

மார்கழி

பூராடம் 

1+2+3+4 பாதங்கள்

தனுசு

மார்கழி

தை

உத்ராடம்

1 ஆம் பாதம்

2+3+4 பாதங்கள்

தனுசு

மகரம்

தை

திருவோணம் 

1+2+3+4 பாதங்கள்

மகரம்

தை

மாசி

அவிட்டம் 

1+2 பாதங்கள்

3+4 பாதங்கள்

மகரம்

கும்பம்

மாசி

சதயம் 

1+2+3+4 பாதங்கள்

கும்பம்

மாசி

பங்குனி

பூரட்டாதி 

1+2+3 பாதங்கள்

4 ஆம் பாதம்

கும்பம்

மீனம்

பங்குனி

உத்திரட்டாதி

1+2+3+4 பாதங்கள்

மீனம்

பங்குனி

ரேவதி 

1+2+3+4 பாதங்கள்

மீனம்