நட்சத்திரம் மற்றும் நட்சத்திர அதிபதிகள் நிர்ணயிக்கும் கிரக பலம்.

ஒரு ஜாதகம் பார்க்கும்போது ஒரு கிரகத்தின் பலம் என்ன என்பதை நிர்ணயம் செய்த பின்புதான் பலன் முடிவு செய்ய முடியும் . ஒரு கிரகத்தின் பலம் அந்த கிரகம் எந்த நட்சத்திரம் சார்ந்து உள்ளது [ நட்சத்திர சாரம் ] என்பதை வைத்துதான் தீர்மானிக்க இயலும் . .

ஒரு கிரகம் ஒரு பாவத்தில் அமர்துள்ளது என்று வைத்துக்கொள்வோம் அது ஆட்சி உச்சம் பகை நீசம் வக்கிரம் பெற்று இருந்தாலும் அது நிற்க்கும் நட்சத்திர சாரம் சாதகமாக இருந்தால் நல்ல பலனும் பாதகமாக அதாவது பகை கிரகத்தின் நட்சத்திர சாரம் பெற்று இருந்தால் தீய பலனையும் அல்லது பலன் இல்லாத நிலையும் உண்டாக வாய்ப்பு உள்ளது. கீழ் கண்ட அட்டவணை மனப்பாடம் செய்துகொள்வது சிறப்பு.

நட்சத்திரம் 

அதிபதி

ரோஹினி - ஹஸ்தம் - திருவோணம் 

சந்திரன் 

மிருகசீரிஷம் - சித்திரை - அவிட்டம் 

செவ்வாய்

ஆயில்யம் - கேட்டை - ரேவதி 

புதன்

புனர்பூசம் - விசாகம் - பூராட்டாதி 

குரு

பரணி - பூரம் - பூராடம் 

சுக்கிரன்

பூசம் - அனுசம் - உத்திரட்டாதி

சனி

கார்த்திகை - உத்திரம் - உத்திராடம் 

சூரியன்

திருவாதிரை - ஸ்வாதி - சதயம் 

ராகு 

அஸ்வினி - மகம் - மூலம் 

கேது