திதிகள் – திதி சூனிய ராசிகள் [ விஷ சூனிய ராசி ]
ஒரு ஜாதகத்தில் பலன் சொல்லும்போது திதி சூனிய ராசிகள் பற்றியும் திதி சூனிய கிரகங்கள் பற்றியும் அறியாமல் பலன் சொல்வது தவறான பலன்களை முடிவு செய்ய நேரிடும்.
அமாவாசை திதி மற்றும் பௌர்ணமி திதி சேர்த்து திதிகள் வளர்பிறையில் பதினைந்தும் தேய்பிறையில் பதினைந்தும் கொண்டவை.
சூரியன் நின்ற இடத்தில் இருந்து ஏழு வீடுகளுக்குள் சந்திரன் இருந்தால் அந்த ஜாதகர் வளர்பிறையில் பிறந்துள்ளார் என்றும், சூரியனில் இருந்து எட்டு முதல் பனிரெண்டாம் வீடுவரை சந்திரன் நின்றால் தேய்பிறையில் பிறந்துள்ளார் என்றும் அறியலாம்
அதாவது ஒருவர் பிறக்கும் பொது எந்த திதியில் பிறந்துள்ளார் என்று அறிந்து கொண்டு அந்த திதிக்கு உண்டான திதி சூனிய ராசி மற்றும் திதிசூனிய கிரகங்கள் எது என்று அறிந்து அந்த ஜாதகருக்கு அப்படி பட்ட ராசிகளில் கிரகங்கள் இருப்பினும் அல்லது திதி சூனிய ராசி ஒரு பாவகமாக வருகிறதென்றாலும் அதன் பலன் சூனியமாக இருக்கும். இதை பெரும்பாலான ஜோதிடர்கள் கணக்கில் கொள்வது இல்லை.
அமாவாசை பௌர்ணமிக்கு மட்டுமே திதி சூனிய அமைப்பு கிடையாது.
ஒரு ஜாதகத்தில் பலன் பார்க்கும் முன்பு அந்த ஜாதகத்தின் யோகி, அவயோகி, பாதகாதிபதி, மாரகாதிபதி, திதி சூனிய ராசி, திதி சூனிய கிரகங்கள் போன்றவை கவனிக்காமல் பலன் முடிவு செய்யும்போது அந்த ஜோதிடர் கண்கள் மறைக்கப்பட்டு தவறான பலன்கள் சொல்லும் சூழ்நிலை உருவாகிறது.
இதை சிலர் சுபகாரியங்களுக்கு மட்டுமே பார்க்கும் பழக்கமும் உள்ளது. ஆனால் திதி சூனிய ராசியில் உள்ள ஒரு கிரகம், மற்றும் திதி சூனிய கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்றாலும் சூனியம் என்ற வெறுமை ஆட்கொண்டு பலம் இழப்பதை பார்க்க முடிகிறது. ஒரு நல்ல கிரகம் திதி சூனியம் அமைப்பு பெற்றால் செயல்பட இயலாமாலும். ஒரு தீய கிரகம் திதி சூனிய அமைப்பு தீமையான இடங்களில் அமைய பெற்றால் நன்மையும் தரும் என சில குறிப்புகள் சொல்கின்றன .
ஒரு சில ஜோதிட நூல்கள் திதி சூனிய ராசி மற்றும் அந்த திதி சூனிய ராசி அதிபதி மட்டுமே பாதிக்கப்படுவதாகவும் அப்படி பட்ட ராசி அதிபதிகள் ஆட்சி உச்சம் பெற்றால் மட்டுமே பலம் இழக்கும் என்றும், வக்கிரம், வர்கோதமம், அஸ்தமனம், அஸ்தமன வக்கிரம், ஸ்தான பரிவர்த்தனை, சார பரிவர்த்தனை போன்ற அமைப்புகளை பெறும்போது பலம் குறையாமல் அதன் பலனை தரும் என்றும் சொல்லப்படுகிறது.
கீழே கொடுக்கபட்டுள்ள அட்டவணை எந்த திதியில் எந்த ராசியும் கிரகமும் சூனியம் பெறுகிறது என விளக்கப்பட்டுள்ளது.
திதி | திதி சூனிய ராசி | திதி சூனிய கிரகம் |
பிரதமை | மகரம், துலாம் | சனி, சுக்கிரன் |
துவிதியை | தனுசு, மீனம் | குரு |
திரிதியை | மகரம், சிம்மம் | சனி, சூரியன் |
சதுர்த்தி | கும்பம், ரிஷபம் | சனி, சுக்கிரன் |
பஞ்சமி | மிதுனம், கன்னி | புதன் |
சஷ்டி | மேஷம், சிம்மம் | செவ்வாய், சூரியன் |
சப்தமி | தனுசு, கடகம் | குரு, சந்திரன் |
அஷ்டமி | மிதுனம், கன்னி | புதன் |
நவமி | சிம்மம், விருச்சிகம் | சூரியன், செவ்வாய் |
தசமி | சிம்மம், விருச்சிகம் | சூரியன், செவ்வாய் |
ஏகாதசி | தனுசு, மீனம் | குரு |
துவாதசி | மகரம், துலாம் | சனி, சுக்கிரன் |
திரியோதசி | ரிஷபம், சிம்மம் | சுக்கிரன், சூரியன் |
சதுர்த்தசி | மிதுனம், கன்னி | புதன் |