கோசார பலன்கள்

கீழே உள்ள கிரகங்களை கிளிக் செய்து கோசார பலன்களை தெரிந்து கொள்ளலாம்
சூரியன்சந்திரன் செவ்வாய்
புதன் குரு சுக்கிரன்
சனி ராகு கேது

செவ்வாய் கோசார பலன்கள்

செவ்வாய் கோசார பலன்கள்:  செவ்வாய் ஒரு ராசியில் மாத காலம் சஞ்சரிப்பார். ராசியில் முற்பகுதியில் சஞ்சாரம் செய்யும் பொது தான் தரவேண்டிய சுப அசுப பலன்களை தருவார்.


கோசார செவ்வாய் ஜெனன ராசியில் இருந்து ஒவ்வொரு ராசியாக சஞ்சரிக்கும் பொது ஏற்படும் சுப அசுப பலன்கள் கீழே உள்ளது.

குறிப்பு : கோசார பொது பலன்கள் 40% தாக்கத்தை மட்டுமே ஒரு ஜாதகருக்கு உண்டுபண்ணும். ஜெனன ஜாதகம் மற்றும் நடப்பு தசா புக்திகள் 60% தாக்கத்தை உண்டு பண்ணும்

சுப பலன் – [ராசி] முதல் செவ்வாய் 3, 6, 11 வீடுகளில் பயணிக்கும் போது சுப பலன்

அசுப பலன் – [ராசி] முதல் செவ்வாய் 1, 2, 4, 5, 7, 8, 9, 10, 12 வீடுகளில் பயணிக்கும் போது அசுப பலன்

ராசி வீட்டில் (முதலாம் ) :

தொல்லை, குடும்பத்தில் சண்டை சச்சரவு போன்றவை ஏற்படும்.

இரண்டாம் வீட்டில் :

அரச விரோதம், பகை, சண்டை சச்சரவு, திருடு போதல், பித்த நோய் , தனம் விரயம், ரத்த காயம், குடும்ப தகராறு போன்றவை ஏற்படும்.

மூன்றாம் வீட்டில்:

செல்வம் சேரும், அதிகாரம், நில மனை சேர்க்கை, தைரியம், பகை நீங்கும், பிறருடன் சண்டை மற்றும் கலகம் செய்ய தைரியம் ஏற்படும்.

நான்காம் வீட்டில்:

நோய், தீயோர் தொடர்பு, தாயார் உடல் பாதிப்பு, குடும்ப பிரச்சனைகள், பயண நஷ்டம் போன்றவை ஏற்படும்.

ஐந்தாம் வீட்டில் :

வாரிசுகளால் தொல்லை, பகை, கோபம், எதிரிகளின் தொல்லை, நோய், கவர்ச்சி குறைதல், களவு போதல், சண்டை, குடும்ப ஆதரவு போன்றவை ஏற்படும்.

ஆறாம் வீட்டில் :

வெற்றி, பகை நீங்குதல், செல்வ சேர்க்கை, பணவரவு, நட்பால் உதவி, குடும்பத்தில் மகிழ்ச்சி, வசதி, பகைவர் நண்பர் ஆவது போன்றவை நடக்கும்.

ஏழாம் வீட்டில் :

குடும்பத்தில் சண்டை, கண் நோய், வயிறு வலி, நண்பர்களோடு பகை, வீண் அலைசல், கெட்ட பெயர் போன்றவை ஏற்படும்.

எட்டாம் வீட்டில்:

ரத்த காயம் அல்லது ரத்த போக்கு, கௌரவ குறைவு, பண விரையம், தற்கொலை எண்ணம், பிறருக்கு அடிபணிதல், மனைவியுடன் சண்டை, ஆயுத காயம் போன்றவை ஏற்படும்.

ஒன்பதாம் வீட்டில் :

உடல் நலம் மற்றும் வலிமை குறையும், அலைச்சல், அவமானம், விரையம், மன குழப்பம், பொன் பொருள் சேரும், மனைவியால் ஆதரவு, நோய், படிப்பில் சிக்கல், உறவினர் உதவி, வலுவில்லாமல் நடைபிணமாக இருக்கும் சூழல் போன்றவை ஏற்படும்.

பத்தாம் வீட்டில் :

தொழில் மேன்மை, முதலீட்டு வருவாய், மனைவியால் மகிழ்வு, திடீர் பண வரவு, போன்றவை ஏற்படும்.

பதினொன்றாம் வீட்டில்:

வெற்றி, பொருள் வரவு, முன்னேற்றம், சுப காரியங்கள், உடன் பிறப்பால் வருவாய், நண்பர்கள் மூலம் வருவாய், புதிய நண்பர் சேர்க்கை போன்றவை ஏற்படும்

பனிரெண்டாம் வீட்டில் :

தேவையற்ற தொல்லை, வீண் செலவு, பித்த நோய், கண் உபாதை, மாற்று பாலினதவரால் துன்பம், கெட்ட பெயர், மருத்துவ செலவு, பொருள் இழப்பு, ஆபத்தான நோய் போன்றவை ஏற்படும்.

செவ்வாய் சுப பலம் பெற்று சனி சம்பந்தம் சேர்க்கை பார்வை நட்சத்திர சாரம் இன்றி ராகு கேது அஸ்தங்க தோஷம் பெறாமல் நல்ல இடத்தில் அமர்ந்தால் கேடு பலன் குறைந்து மிதமான பலன்கள் நடைபெறும். 6, 8, 12, ஆகிய வீடுகளில் செவ்வாய் நல்ல நிலையில் அமர்ந்தால் பாதிப்பு குறையும்.