கோசார பலன்கள்

கீழே உள்ள கிரகங்களை கிளிக் செய்து கோசார பலன்களை தெரிந்து கொள்ளலாம்
சூரியன்சந்திரன் செவ்வாய்
புதன் குரு சுக்கிரன்
சனி ராகு கேது

சூரியன் கோசார பலன்கள்

சூரியன் ஒரு ராசியில் 1 மாத காலம் சஞ்சரிப்பார். சஞ்சரிக்கும் ராசியில் முற்பகுதியில் சுப அசுப பலன்களை நடத்தி வைப்பார். – தமிழ் ஜோதிடம்


கோசார சூரியன் ஜெனன ராசியில் இருந்து ஒவ்வொரு ராசியாக சஞ்சரிக்கும் பொது ஏற்படும் சுப அசுப பலன்கள்

குறிப்பு : கோசார பொது பலன்கள் 40% தாக்கத்தை மட்டுமே ஒரு ஜாதகருக்கு உண்டுபண்ணும். ஜெனன ஜாதகம் மற்றும் நடப்பு தசா புக்திகள் 60% தாக்கத்தை உண்டு பண்ணும்

சுப பலன் – [ராசி] முதல் சூரியன் 3, 6, 11 வீடுகளில் பயணிக்கும் போது சுப பலன்

அசுப பலன் – [ராசி] முதல் சூரியன் 1, 2, 4, 5, 7, 8, 9, 10, 12 வீடுகளில் பயணிக்கும் போது அசுப பலன்

ராசி வீட்டில் (முதலாம் ) :

விரையம், கௌரவ கேடு, வயிறு மார்பு வலி, அலைச்சல், உஷ்ண நோய், குடும்ப .பிரச்சனைகள் போன்றவை ஏற்படும்.

இரண்டாம் வீட்டில் :

பொருள் நஷ்டம், ஏமாற்றம், கண் நோய், சுகமின்மை, மன நிம்மதியின்மை, குடும்ப பிரச்சனைகள், வருமான குறைவு போன்றவை ஏற்படும்.

மூன்றாம் வீட்டில் :

புதிய பதவி, செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்யம், எதிரிகளின் வீழிச்சி, பணவரவு, உடன் பிறந்தோர் ஆதரவு, அரசு ஆதாயம், நட்புதவி போன்றவை ஏற்படும்.

நான்காம் வீட்டில் :

நோய், சுக பங்கம், வரவும் செலவும், கவலை, பயண லாபம், தாயார் ஆதரவு, வீட்டில் சுப நிகழ்வு, வாகன வருவாய் போன்றவை இருக்கும்.

ஐந்தாம் வீட்டில் :

நோய், பகை, துன்பம், அரசு தொல்லை, செலவு, வருவாய் குறைவு, பண இழப்பு, குடும்ப ஆதரவு போன்றவை ஏற்படும்.

ஆறாம் வீட்டில் :

ஆரோக்யம், மகிழ்ச்சி, பகையின்மை, நட்பால் ஆதாயம், வருவாய் பெருக்கம், எதிரிகளால் லாபம், போன்றவை ஏற்படும்.

ஏழாம் வீட்டில் :

அலைச்சல், வயிறு நோய், பயம், கீழ்நிலை, நட்பு மற்றும் வாழ்க்கை துணையால் பிரச்சனை, உஷ்ண நோய் போன்றவை ஏற்படும்.

எட்டாம் வீட்டில் :

நோய், பயம், வாழ்வு துணையால் மன கஷ்டம், சண்டை, பொருள் இழப்பு, தந்தைக்கு நோய், போன்றவை ஏற்படும்.

ஒன்பதாம் வீட்டில் :

நிம்மதியின்மை, கௌரவ குறைவு, பொருளாதார பகை, செலவு, அலைச்சல், குடும்ப ஆதரவு, புதிய நட்பு, அந்நிய தேச உதவி, நட்பால் நன்மை போன்றவை ஏற்படும்.

பத்தாம் வீட்டில் :

பகை வெல்லுதல், முயர்ச்சிகளில் வெற்றி, தொழிலில் தடை, மூத்த சகோதர வழி செலவுகள், குடும்பதில் ஆத்ராவு போன்றவை ஏற்படும்.

பதினோராம் வீட்டில் :

புதிய பதவி, மதிப்பு உயர்வு, செல்வம் பெருகும், ஆரோக்யம், அரசு ஆதாயம், மூத்த உடன்பிறப்பு ஆதரவு, லாபம் ஆகியவை ஏற்படும்.

பனிரெண்டாம் வீட்டில் :

வெற்றி, தீயவை தோல்வி, செலவு, குடும்பதினாரால் மருத்துவ செலவு, உறவுகளால் தொல்லை, அந்நிய பெண்களால் நிம்மதியின்மை போன்றவை ஏற்படும்.

 

சூரியன் சுப பலம் பெற்றாலோ, நடப்பு தசா புக்தி சூரியனுக்கு சாதகமாக இருந்தாலோ, சூரியன் ராகு கேது பிடியில் இல்லாமல் சிறப்பாக இருந்தாலோ, ஆட்சி உச்ச வீடுகளில் பிற கிரக சேர்க்கை பார்வை இல்லாமல் இருந்தாலோ பாதிப்பு பலன்கள் குறைவாக ஏற்படும்.