கோசார பலன்கள்

கீழே உள்ள கிரகங்களை கிளிக் செய்து கோசார பலன்களை தெரிந்து கொள்ளலாம்
சூரியன்சந்திரன் செவ்வாய்
புதன் குரு சுக்கிரன்
சனி ராகு கேது


சனி கோசார பலன்கள்

சனி ஒரு ராசியில் வருட காலம் சஞ்சரிப்பார்.  ஒருவர் வாழ்வில் ஆயுள் தீர்க்கமாக இருப்பின் மூன்று முறை ராசியில் சஞ்சரிப்பார்.  சனி ஒரு ராசியின் பிற்பகுதியில் சஞ்சாரம் செய்யும் பொழுது கொடுக்கவேண்டிய சுப அசுப பலன்களை கொடுப்பார். ஒருமுறை சந்திரன் நின்ற ராசியை கடக்க 30 வருடங்கள் எடுத்துக்கொள்வார்.

30 வருடம் ஒருமுறை என்றாலும், சிலருக்கு பிறக்கும் போதே அல்லது பிறந்த சிறு வயதிலேயே கூட ஏழரை சனி ஆரம்பிக்கும்.  அப்படிபட்ட சூழலில் பிறந்தவர்கள் மூன்றாம் சுற்று 65 முதல் 70 வயதிர்க்கு பக்கமாக வந்து விடும். அப்போது மிகுந்த சிரமத்தையும், மரணம் அல்லது மரணத்திற்கு ஒப்பான கண்டங்களை அனுபவிப்பார்கள். இது அனுபவ உண்மை..

சனி வேறு பகைக்கிரக பார்வை சேர்க்கை இன்றி எந்த தோஷம்களும் இல்லாமல் ஆட்சி உச்சம் நட்பு பெற்று ஒரு ஸ்தானத்தில் யோகாதிபதியாக அமரும் பட்சத்தில் மூன்றாம் சுற்றையும் தாண்டி தீர்க்க ஆயுளோடு இருப்பார். நான்காம் சுற்று தற்போதய பூலோக வாழ்வியலில் சாத்தியம் இல்லை. ஒரு சிலர் அந்த காலங்களில் 120 வயதுக்கு மேல் வாழ்ந்துள்ளனர். அவர்கள் நாலாம் சுற்று ஏழரை சனியை பார்த்தவர்கள் என்று பொருள்.

முதல் சுற்று மிக கஷ்டமான பலன்களையும், இரண்டாம் சுற்று மிதமான கஷ்டங்களையும், மூன்றாம் சுற்று நன்மை தீமை கலந்த பலன்களையும், ஒரு சிலருக்கு நான்காம் சுற்றும் ஏற்படும். பெரும்பாலும் 70 வயதை கடந்த ஜாதகருக்கு மூன்றாம் சுற்று மரணம் அல்லது அதற்க்கு ஒப்பான கண்டங்களை உண்டுபண்ணும் .

கோசார சனி ஜெனன ராசியில் இருந்து ஒவ்வொரு ராசியாக சஞ்சரிக்கும் பொது ஏற்படும் சுப அசுப பலன்கள் கீழே உள்ளது.

குறிப்பு : கோசார பொது பலன்கள் 40% தாக்கத்தை மட்டுமே ஒரு ஜாதகருக்கு உண்டுபண்ணும். ஜெனன ஜாதகம் மற்றும் நடப்பு தசா புக்திகள் 60% தாக்கத்தை உண்டு பண்ணும்

சுப பலன் –     3, 6, 11 ஆம் வீடுகளில் சனி பயணிக்கும் போது சுப பலன்

அசுப பலன் – 12, 1, 2 ஆம் வீடுகளில் சனி பயணிக்கும் போது ஏழரை ஆண்டுகள் அசுப பலன் – ஏழரை சனி காலம்

                   4,8 ஆம் வீடுகளில் சனி பயணிக்கும் போது அசுப பலன் – அர்தாஷ்டம சனி, அட்டம சனி காலம்

கலவை பலன் – 5,7,9,10 ஆம் வீடுகளில் சனி பயணிக்கும் போது நல்லவை  கெட்டவை கலவையாக நடக்கும்

முதலாம் வீட்டில் (ராசி):

ஆபத்து, நெருப்பு மற்றும் விஷத்தால் கண்டம், உறவினர் பிரிவு, நட்பு பகையாக மாறும், வீடு வாசல் இழப்பு, ஊரை விட்டு வெளியே இருத்தல், பண விரையம், மனக்குழப்பம், தீய வழியில் புத்தி செல்வது, ஸ்திரதன்மை அற்ற சூழல் போன்றவை ஏற்படும். பொதுவாக இது ஒரு சிக்கலான நேரம். இதை ஜென்ம சனி என்பர்.

இரண்டாம் வீட்டில்:

நோய், கண் வாய், முகம் சம்பந்த நோய்கள், அகோர லட்சணம், ஆற்றல் குறைவு, பொருள் இழப்பு, மன அமைதி குறைவு, வாக்குவாதம், சில குடும்ப பிரச்சனைகள் தீர்வு, வருவாய் உயர்வு போன்றவை ஏற்படும். இதை குடும்ப சனி என்பர்.

மூன்றாம் வீட்டில்:

பொருள் வருவாய் வரவு, நோய் நீங்கும், பகை வெல்லுதல், புதிய வீடு மற்றும் பதவி, வெற்றி, சுப காரிய நிகழ்வுகள், ஊர்மாற்றம், இடமாற்றம், போன்றவை ஏற்படும்.

நான்காம் வீட்டில்:

குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்தல், பொருள் விரயம், கெட்ட புத்தி, நட்பு மற்றும் உறவினர்களால் கஷ்டம் மற்றும் பிரிவு, நினைவு குறைபாடு, ஆரோக்கிய குறைவு, போன்றவை ஏற்படும். இதை அர்த்தாஷ்டம சனி என்பர்.

ஐந்தாம் வீட்டில்:

பொருளுக்கு கேடு, பிள்ளைகளுக்கு கஷ்டம், சண்டை சச்சரவு, பிள்ளைகள் கனவை நனவாக்க முயற்சி, வாழ்வில் திடீர் திருப்பங்கள், குடும்ப செலவு அதிகரிப்பு, தாரத்திர்க்கு நோய், லாபம் குறைவு போன்றவை ஏற்படும்.

ஆறாம் வீட்டில்:

நோய் நீங்குவது, ஆரோக்யம், உடன்பிறந்தோர் ஆதரவு, கடன் குறைதல், வழக்கில் வெற்றி, தொழில் முயற்சி, புதிய பதவி, தூர பயணம் போன்றவை உண்டாகும்.

ஏழாம் வீட்டில்:

அலைச்சல், தொல்லை, வெறுப்பு, குடும்பத்தை விட்டு பிரிதல், பகை, செலவு, நோய், தைரியமின்மை, முன்கோபம், அண்டை அயலாருடன் பிரச்சனை, குடும்ப ஒற்றுமை குறைவு, வெளியூர், வெளிநாட்டு பயணம், போன்றவை ஏற்படும். இதை சிலர் கண்ட சனி என்பர்.

எட்டாம் வீட்டில்:

நஷ்டம், துன்பம், நோய், கவலை, வறுமை, அவமரியாதை, துக்கம், விபத்து, குடும்ப தகராறு, தொழிலில் கஷ்டம், நஷ்டம், கடன் வாங்குதல், கடன் கட்ட சிரமபடுதல், ஒருவித பயம், வம்பு வீடு தேடி வருதல், மனகுழப்பம், போன்றவை ஏற்படும். இதை அட்டம சனி என்கின்றனர்.

ஒன்பதாம் வீட்டில்:

நோய், தைரியமின்மை, அலைச்சல் பொருள் விரயம், வறுமை, பகை, மன அமைதி குறைவு, லாபமின்மை போன்றவை ஏற்படும்

பத்தாம் வீட்டில்:

புதிய தொழில் உண்டாகும்,.தாயாருக்கு மருத்துவ செலவு, பொருள் விரயம் ஏற்படும், கெட்ட பெயர் ஏற்படும், குடும்ப சிக்கல், தூக்கமின்மை, உணவு உண்ண நேரமின்மை, பயண நஷ்டம் போன்றவை ஏற்படும்

பதினொன்றாம் வீட்டில்:

பகை வெல்லுதல், செல்வ சேர்க்கை, புகழ், காரிய வெற்றி, சிறிய நோய்கள், புத்திரரால் இம்சை போன்றவை ஏற்படும்.

பனிரெண்டாம் வீட்டில்:

கவலை, கடன், பிரச்சனை, விரையம், மனக்குழப்பம், குடும்ப சச்சரவு, நோய், பகை, காரிய தடை, போன்றவை ஏற்படும். இதற்க்கு விரைய சனி என்று சொல்லுவார். ஏழரையின் முதல் பகுதி.

இந்த பலன்கள் வெகு குறைவாக  சிலருக்கு மட்டும் மாறுபடும். அதாவது யாருக்கு ஜெனன ஜாதகத்தில் சனி சுப பலம் பெற்று நல்ல நிலையில் இருக்கிறாரோ அவர்கள் ஏழரை சனி, அட்டம சனி,  அர்தாஷ்டம சனி போன்றவை பெரிய பாதிப்பை தருவதில்லை. மாறாக வாழ்வில் முன்னேற்றம் அடைவதை பார்க்க முடிகிறது.