கோசார பலன்கள்

கீழே உள்ள கிரகங்களை கிளிக் செய்து கோசார பலன்களை தெரிந்து கொள்ளலாம்
சூரியன்சந்திரன் செவ்வாய்
புதன் குரு சுக்கிரன்
சனி ராகு கேது

சந்திரன் கோசார பலன்கள்

சந்திரன் கோசார பலன்கள் – சந்திரன் ஒரு ராசியில் நாள் காலம் சஞ்சரிப்பார். ராசியின் முற்பகுதியில் சஞ்சாரம் செய்யும் பொழுது சுப அசுப பலன்களை தருவார்.


கோசார சந்திரன் ஜெனன ராசியில் இருந்து ஒவ்வொரு ராசியாக சஞ்சரிக்கும் பொது ஏற்படும் சுப அசுப பலன்கள் கீழே உள்ளது.

குறிப்பு :  கோசார பொது பலன்கள் 40% தாக்கத்தை மட்டுமே ஒரு ஜாதகருக்கு உண்டுபண்ணும்.  ஜெனன ஜாதகம் மற்றும் நடப்பு தசா புக்திகள் 60% தாக்கத்தை உண்டு பண்ணும்

சுப பலன் –    [ராசி] முதல் சந்திரன் 1, 3, 6, 7, 10, 11 வீடுகளில் பயணிக்கும் போது சுப பலன்

அசுப பலன் –  [ராசி] முதல் சந்திரன் 2, 4, 5, 8, 9, 12 வீடுகளில் பயணிக்கும் போது அசுப பலன்

முதல் வீட்டில் :

நல்ல உணவு, படுக்கை, புது துணிமணி கிட்டும்.  மன குழப்பம், வீண் சண்டை மற்றும் விவாதம்,  பிரச்சனைகள்  போன்றவை உண்டாகும்.

இரண்டாம் வீட்டில் :

காரிய தடை , பொருள் நஷ்டம்,  மரியாதை குறைவு போன்றவை ஏற்படும்.  குடும்பத்திற்கு செலவு மற்றும் மகிழ்ச்சி ஏற்படும் .

மூன்றாம் வீட்டில் :

மகிழ்ச்சி, வருமானம், இன்பம், வெற்றி போன்றவை கிடைக்கும்

நான்காம் வீட்டில் :

தாயார் வழி ஆதரவு , வழக்குகளில் சாதக பலன், தம்பதிகள் அன்யோன்யம் , பணவரவு உண்டு . நம்பிக்கை இல்லாமை மற்றும் தைரியம் இல்லாமை ஏற்படலாம் .

ஐந்தாம் வீட்டில் :

கவலை, நோய் , தடை, தாழ்வு ஏற்படும் – குடும்பதினாரால் வரவு, மகிழ்ச்சி, பந்தய வெற்றி போன்றவை ஏற்படும் .

ஆறாம் வீட்டில் :

வருவாய், சுகம், ஆரோக்யம், பகை நீக்கம், செய்தொழில் விருத்தி, புதிய நட்பு, விருந்து விஸேஷம் போன்றவை நடக்கும்..

ஏழாம் வீட்டில் :

பண வரவு, வாகன வசதி, மனைவியால் மகிழ்ச்சி, பயண லாபம், வழக்குகளில் சாதக பலன் போன்றவை ஏற்படும்.

எட்டாம் வீட்டில் :

சந்திராஷ்டமம் , பயம், வீண் பழி, நோய், தடை தாமதம், மன குழப்பம், பொருள் விரையம் போன்றவை ஏற்படும்.

ஒன்பதாம் வீட்டில்:

அச்சம், கட்டுபாடு, உடல் உழைப்பு, வயிற்றுவலி, எதிரிகளால் தொல்லை, நோய், தப்பானர் வழி கவலை போன்றவை ஏற்படும்.

பத்தாம் வீட்டில்:

முயற்சி வெற்றி, குடும்பதினரால் மகிழ்ச்சி, நட்பு மற்றும் உறவுகளால் உதவி, பிறரின் ஒத்துழைப்பு போன்றவை கிட்டும்.

பதினொன்றாம் வீட்டில்:

பொருள் வரவு, நண்பர்கள் சந்திப்பு, பயணங்கள் மற்றும் பந்தயங்களில் வெற்றி, வரவால் மகிழ்ச்சி போன்றவை ஏற்படும்.

பன்னிரெண்டாம் வீட்டில் :

விரையம், கௌரவ கேடு, விபத்து, பொருள் இழப்பு, மருத்துவ செலவு தொலைபேசியால் பிரச்சனை போன்றவை ஏற்படும்.

இவை பொது பலன்கள் தான் . பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில். தீய கிரக சேர்க்கை மற்றும் பார்வை பெறாமல், பகை ஸ்தானதில் இல்லாமல், சுபத்துவம் பெற்று இருந்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.