கோசார பலன்கள்


தமிழ் ஜோதிடம் – கோள்சார பலன்கள்  அல்லது கோசார பலன்கள் என்பது சந்திரன் மற்றும் இதர கிரகங்கள் நடப்பு காலத்தில் சுற்றிவருவதை வைத்து பலன் சொல்வதாகும்.

தினபலன் வாரபலன் மாத பலன், வருட பலன், ராகு கேது பெயர்ச்சி பலன், சனிபெயர்ச்சி பலன், குரு பெயர்ச்சி பலன் போன்றவை இவைக்கொண்டுதான் சொல்லப்படுகிறது. ஒருவர் வாழ்வில் கோசார பலன்கள் சுமார் 40% மட்டுமே வேலை செய்யும்.

ஒருவருடைய தசா புக்திகள் சாதகமாக இருந்து கோசாரம் பாதகமாக இருந்தாலும் பெரிய அளவில் தாக்கம் இருக்காது. ஒருவருடைய ஜாதகத்தில் நடப்பு தசா புக்தி பாதகமாக இருந்து கோச்சாரமும் பாதகமாக இருந்தால் துன்பம் அதிகமாக இருக்கும் . ஒருவருடைய ஜாதகத்தில் தசா புக்தி பாதகமாக இருந்து கோசாரம் சாதகமாக இருந்தால் ஓரளவு சிக்கல்களில் இருந்து தப்பித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இனி ஒவ்வொரு கிரகமும் கோசர ரீதியாக எப்படி பட்ட பொது பலன் கொடுக்கும் என்பதை பார்ப்போம். ஜாதக பலன் பார்க்கும்போது லக்னத்தை அடிப்படையாக கொண்டு பலன் பார்க்க வேண்டும்.  நடப்பு  கோசார பலன்கள் பார்க்கும்போது ஒருவரின் ராசியை வைத்து பார்க்க வேண்டும் .

கோசார பலன்கள்

கீழே உள்ள கிரகங்களை கிளிக் செய்து கோசார பலன்களை தெரிந்து கொள்ளலாம்
சூரியன்சந்திரன் செவ்வாய்
புதன் குரு சுக்கிரன்
சனி ராகு கேது