கிரகங்களின் ஆட்சி உச்சம் மூலதிரிகோணம் நீச்சம்

காலச்சக்கர விதிகள் படி ராசி மண்டலத்தின் ஒவ்வொரு ராசிக்கும் கிரகங்கள் சொந்த வீட்டு பலமான ஆட்சி பலம், உச்சம் பெரும் பலம், மூலதிரிகோண பலம்  மற்றும் நீசம் பலம் போன்றவை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு பாவக்த்தில் ஒரு கிரகம் நின்ற அமைப்பில் அதன் பலம் மற்றும் பலனை அறிய முடிகிறது.

கிரகங்கள் ஆட்சி பெரும் ராசிகள் :

சூரியன் சந்திரன் தவிர ஏனைய ஐந்து கிரகங்கள் இரு ராசிகளுக்கு சொந்த பாவக உரிமையை பெறுகிறது. சூரியன் சந்திரனுக்கு மட்டும் ஒரே ஒரு ராசிக்கு சொந்த ஆட்சி அமைப்பு சொல்லப்பட்டுள்ளது.

சூரியன் – சிம்ம ராசியில் ஆட்சி

சந்திரன் – கடகராசியில் ஆட்சி

செவ்வாய் – மேஷம் மற்றும் விருச்சிக ராசியில் ஆட்சி

புதன் – மிதுனம் மற்றும் கன்னி ராசியில்  ஆட்சி

வியாழன் – தனுசு மற்றும் மீன ராசியில்  ஆட்சி

சுக்கிரன் – ரிஷபம் மற்றும் தூலா ராசியில் ஆட்சி

சனி – மகரம் மற்றும் கும்பம் ராசியில் ஆட்சி

ராகு கேது நிழல் கிரகங்கள் என்பதால் ஆட்சி வீடுகள் இல்லை .

கிரகங்கள் உச்சம் பெரும் ராசிகள் :

ஒரு கிரகம் எந்த ராசியில் உச்சம் அடைகிறதோ அதன் நேர் எதிர் எழாவ்து ராசி நீச்சம் அடைகிறது என்பது விதி. மேலும் ஒரு கிரகம் ஒரு உச்சம் பெற்ற ராசியில் அமர்ந்துவிட்டாலும் குறிப்பிட்ட பாகையில் மட்டுமே உச்சம் பெரும் . ஆகையால் ஒரு கிரகம் எந்த நட்சத்திரதில் பிறக்கும்போது உதயமானது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவனையில் விபரம் அறியலாம்