தமிழ் ஜோதிடம் : நவ கிரகங்கள் கணிப்பு, ஜாதக பலன்கள்.

இலவச தமிழ் ஜோதிட களஞ்சியம் – ஜோதிட ஞானம் பெற உதவும். ஜாதகம் பார்க்க ஓரளவு தெரிந்திருந்தால் கிரகங்கள் மற்றும் அதன் அமைப்புகளை சுலபமாக புரிந்து கொள்ளலாம். தினமும் புது புது விஷயங்கள் மற்றும் பக்கங்கள் வெளியிடப்படும். ஆகையால் அவ்வப்போது நீங்கள் இங்கு விஜயம் செய்தால் சற்று ஜோதிட ஞானத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

நம்மை சுற்றியுள்ள அண்டவெளியில் (Universe) பல நூறு கோடி கிரகங்கள் (Planets) சுற்றி வந்து கொண்டுள்ளது. நமக்கு தெரிந்த, ஏற்றுக்கொள்ளப்பட்ட கிரகங்களாக நவ கிரகங்கள் சூரிய குடும்பத்தில் (Solar System) உள்ளது. நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த சூரிய குடும்பம் போல அண்டவெளியில் பல சூரிய குடும்பங்கள் உள்ளன.

இந்த வலை பகுதி தென்னிந்தியாவின் தமிழ் மொழியில் (South Indian Tamil language ), பழம்பெரும் சித்தர்கள் (Ascetics or Supernals ) மற்றும் பற்பல ஜோதிட அறிஞர்கள் (Astrologist) அருளிய, எனக்கு தெரிந்த, நான் கேள்விப்பட்ட, நான் கற்றுக்கொண்ட, ஜோதிட விஷயங்களை பகிர்ந்து கொள்ள எடுத்துக்கொண்ட ஒரு முயற்சியாக இந்த வலைப்பகுதியினை பார்க்கிறேன்.

பொதுவாக நம்மை சுற்றியுள்ள இந்த அண்டவெளியில் பல நூறு கோடி கிரகங்கள் சுற்றி வந்து கொண்டுள்ளது. நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த சூரிய குடும்பம் போல அண்டவெளியில் பல சூரிய குடும்பங்கள் உள்ளன என்பதை நாசா விண்வெளி (NASA Space research center) ஆய்வு மையம் பல புகைப்படங்கள் மூலம் வெளியிட்டு உள்ளன.

ஒரு நாடு என்று இருந்தால் அதன் சட்ட திட்டங்கள் அந்த நாடு மக்களுக்கு பொருந்தும். அதே நேரம் அண்டை நாட்டு சட்ட திட்டங்கள் நாம் குடியிருக்கும் நாட்டுக்கு செல்லுபடியாகது. அதுபோல அண்டை வெளியில் பல சூரிய மண்டலங்கள் இருந்தாலும், நாம் வசிக்கும் சூரிய மண்டலமும், நமது சூரிய மண்டலம் சார்ந்த கிரகங்களும் நமது வாழ்வியல் சார்புகளை நிர்வாகம் செய்கின்றன.

டெலஸ்கோப் (Telescope) , வான்வெளி ஆராய்ச்சி உபகரணங்கள் எதுவுமே இல்லாமல் தனது தெய்வ அருளால், தனது சக்தியால் நம்மை சுற்றி நவ கிரகங்கள் உள்ளன என்பதை சித்தர்கள் மற்றும் ஞானிகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நமக்கு ஏடுகள் வாயிலாக (Prediction) தெரியபடுத்தி சென்றுள்ளனர். சித்தர்களின் (Ascetics or Supernals power) சக்திகளை விவரிக்கவோ அல்லது விளக்கம் சொல்லும் அளவிற்கோ நமக்கு ஆற்றல் இல்லை என்பதால் இந்த இணைய தளம் ஏற்கனவே நமது முன்னோர்கள் நமக்கு அருளிய அதே விஷயத்தினை இங்கு பிறருடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஜோதிடம் என்பது ஒரு கடல் போன்றது. இதில் மானுடன் தெரிந்து கொண்டது சொற்ப அளவே. இந்த இணையத்தினை நீங்கள் ஒரு தகவல் தளமாகவே உபயோகிக்க வேண்டுகிறேன். நடை முறை வாழ்வில் இந்த இனையத்தின் தகவல்கள் பொருந்தாமல் போக வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் இங்குள்ள தகவல்களை ஒரு ஆராய்ச்சி கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கவும். தினசரி வாழ்விலோ அல்லது முழுமையான ஜோதிட கல்வி கற்றுக்கொள்ளாமலோ பரிட்சித்து பார்க்கவேண்டாம் என்று வேண்டி கொள்கிறேன்.

இந்த இணையத்தளம் ஒரு தனி மனித முயற்சி என்பதாலும், பல ஜோதிட குறிப்புகள் பல நூல்களில் வாயிலாகவும், ஏடுகள் வாயிலாகவும், உலவி வரும் பல தமிழ் இணையதளங்கள் மூலமாகவும் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டு லாப நோக்கம் இன்றி வாசகர்களின் கருத்தறியும் கல்வி கண்ணோட்டத்தில் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

இங்குள்ள ஜோதிட கருத்துக்கள் எமக்கு சொந்தமானவை அல்ல. முடிந்தவரை யாம் கருத்துக்களின் உரிமையாளரின் பெயரினை ( எமக்கு தெரிந்திருந்தால் மட்டும் ) இந்த இணைய தளத்தினில் நன்றி பகர்கின்றோம். எமக்கு தெரிய வராத பொருளடக்க உரிமையாளர்கள் எமக்கு மின் அஞ்சல் மூலமாக உரிமை ஆதாரத்துடன் உரிமை கோரும் பட்சத்தில் அவர்களது பெயர், புத்தக வெளியீடு, போன்றவை நன்றியோடு வெளியிடுவோம். எமது நோக்கம், பலவித ஜோதிட குறிப்புகள் புத்தக வடிவில் இருபதாலும், பல அற்புத குறிப்புகள் நம்மை விட்டு காணாமல் போகிவிடுமோ என்ற அச்சத்தில் அதை மின்னாக்கம் செய்துள்ளேன்.

எமக்கு சுய விளம்பரத்தில் ஈடுபாடு இல்லை என்பதால், அந்த காலத்து சித்தர்கள் போல், நானும் ஊர் மற்றும் பெயர் வெளிப்படுத்த விரும்பவில்லை. அடை மொழியாக ஜோதிட சிறுவன் என்று எமக்கு யாமே இன்று முதல் பட்டம் சூடி கொள்கிறோம்.

மற்றபடி இங்கு வரும் கூக்ளி விளம்பரம் மூலம் வரும் மிக சொற்பமான வருவாய் இந்த இனைய தளத்தினை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல உபயோக படுத்துகிறேன். எமக்கு இந்த இணையதளம் எந்தவித வருமானமோ ஆதாயமோ ஈட்டித் தருவதில்லை என்றும், இது எமது லாப நோக்கு அற்ற ஒரு பகிர்வு என்று தெரிய படுத்திக்கொள்கிறேன்.

பொதுவாகவே நல்ல ஜோதிடம் அறிந்தவர்கள், ஜோதிட ஞான மிகுதியானவர்கள் வறுமையில் தான் இருக்கின்றனர். ஆயரத்தில் ஓரிருவர் மட்டுமே புத்தக வெளியீடு, இணையதள வெளியீடு மூலமாக வருவாயும் வளமும் சம்பாதித்து வருகின்றனர். இதை ஜோதிடர்கள் எதுக்கும் ஒரு யோகம் வேண்டும் என்று தனக்கு தானே கூட சொல்லிக்கொள்வார்கள். உண்மையும் அதுதான். ஊருக்கே ஜோதிடம் சொல்லும் பல ஜோதிட வல்லுனர்கள் தன சொந்த வாழ்க்கையிலும் பல சோகங்களை சந்தித்துதான் வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட சோகத்திலும் பொறுமை மற்றும் சாந்தமாய் வாழ வழியை தேடிக்கொண்டவர்கள் தான் பிறருக்கு தான் கற்ற ஜோதிடம் வாயிலாக வாழ்கை என்னவாக இருக்கும் என்று போதனை செய்கிறார்கள். ஆக ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு எல்லா வளமும் நலமும் கொண்டவர் என்று தவறாக முடிவு செய்ய வேண்டாம்.

ஒரு சிலர் ஜோதிடர் என்ற பெயரில் பரிகாரம் சொல்வது, அதற்காக பணம் வாங்கி சம்பாதிப்பது, மாடி வீடு, கார், பங்களா என வசதிகள் அனுபவிப்பது என்று சமூக தீங்கு இழைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதால் மூட நம்பிக்கை உடன் தலையாட்டிக் கொண்டு காசு பணம் விரயம் செய்யாமல் சற்று உங்களுக்கு இறைவன் அளித்த புத்தியை உபயோக படுத்தவும்.

ஜோதிடம் (Astrology) என்பது ஒரு கணிதம் சார்ந்த கலை மட்டுமே. அதை ஒரு திறமை என்று சொல்ல முடியாது. தமிழ், ஆங்கிலம், உருது, மலையாளம், ஹிந்தி, பிரஞ்சு, சைனீஸ் என்று பல மொழிகள் கற்றுக்கொள்ளவது எப்படியோ அதுபோலதான் ஜோதிடம் என்பது ஒரு இறையாண்மை சார்ந்த கணித கலை.

எமக்கு மேலே சொன்ன மூன்று துறைகளிலும் ஆர்வம் மற்றும் அனுபவம் உண்டு என்பதால் எம்மால் இதை இங்கு சிறப்பாக செய்யமுடியும் என்ற நம்பிக்கை கொண்டு வடிவமைக்கிறோம். யாம் ஒரு சிறந்த ஜோதிடன் அல்ல. (Astro) ஜோதிடம் சம்பந்தமாக யாம் கற்றுகொண்டவை, இணையதள வடிவமைப்பு சம்பந்தமாக கற்றுகொண்டவை, மற்றும் தேடு பொறி சீரமைப்பு சம்பந்தமாக கற்று கொண்டவை ஆகிய மூன்று தகுதிகளை முன் வைத்து இந்த வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இவற்றில் அறிந்தோ அறியாமலோ ஏதேனும், சொற்சுவை, பொருட்சுவை, சுந்தர தமிழ் போன்றவற்றில் பிழை ஏதும் இருப்பின் சான்றோர்களும் அறிஞர்களும் எம்மை மன்னிக்கவும்.

எத்தனயோ மஹா ஞானிகள் இந்த உலகத்திலே. அனைவருக்கும் என் வந்தனங்கள். - அன்புடன்-ஜோதிட சிறுவன்

நாம் எதை நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகின்றோம். வேண்டும் சுபம்.


ஜோதிட பக்கங்கள்